தமிழ்நாடு

115 அடி நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி ஆய்வு செய்த ஆட்சியர் ஷில்பா..!

Rasus

நெல்லை சேரன்மகாதேவி, கூனியூர் ஊராட்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு மேற்கொண்டார்.

கூனியூர் ஊராட்சி மெயின் சாலையில் அமைந்துள்ள 40 அடி உயரமுள்ள 30,000 கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்கப்படுகிறதா..? என்பதை ஆய்வு மேற்கொண்டார் நெல்லை ஆட்சியர் ஷில்பா. மேலும் அப்பகுதியில் மகளிர் சுகாதார வளாகம், கழிவுநீர் ஓடைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அங்குள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார். அதேபோல சேரன்மகாதேவி பேரூராட்சி பகுதி நீதிமன்றம் எதிரே உள்ள 115 அடி உயரமுள்ள 4 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி சுகாதாரம் மற்றும் குடிநீர் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பதையும், குளோரின் அளவு சரியாக உள்ளதா என்பதனையும் ஆய்வு செய்தார். பல அடி உயரமுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி ஆய்வு செய்த ஆட்சியர் ஷில்பா பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.