தமிழ்நாடு

கட்சித்தாவிய 4 அதிமுக உறுப்பினர்கள் - திமுக வசமாகும் களக்காடு நகராட்சி

kaleelrahman

நெல்லை மாவட்டம் களக்காடு நகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 பேர் மற்றும் ஒரு சுயேட்சை உட்பட 5 பேர்; திமுகவில் இணைந்தனர்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நெல்லை மாவட்டம் களக்காடு நகராட்சியல் உள்ள 27 வார்டுகளில் திமுக 10 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 11 இடத்திலும் அதிமுக 6 இடத்திலும் வெற்றி பெற்றன.

இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 3-வது வார்டு வேட்பாளர் இஸ்ரவேல், 7- வார்டு வேட்பாளர் சோமசுந்தரி, 6-வது வார்டு வேட்பாளர் முருகபெருமாள் மற்றும் 10-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சாந்தி ஆகிய 5 பேரும் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இதனால் களக்காடு நகராட்சியில் திமுக பலம் உயர்துள்ள நிலையில், நகராட்சி திமுக வசமாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் களக்காடு ஒன்றியச் செயலாளர் செல்வ கருணாநிதி, நகர செயலாளர் மணிச்சூரியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.