தமிழ்நாடு

கொரோனா வார்டாக மாறும் நேரு உள் விளையாட்டு அரங்கம் !

கொரோனா வார்டாக மாறும் நேரு உள் விளையாட்டு அரங்கம் !

jagadeesh

நேரு உள் விளையாட்டு அரங்கம் 600 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்றப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 759 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று மட்டும் 624 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 9,989 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஏற்கெனவே நந்தம்பாக்கத்தில் இருக்கும் சென்னை வர்த்தக மையத்தை கொரோனா வார்டாக மாற்றியது தமிழக அரசு. இதனையடுத்து இப்போது நேரு உள் விளையாட்டு அரங்கை கொரோனா வார்டாக மாற்ற உத்தரவிட்டுள்ளது.

இப்போது அதிக அளவிலான நபர்களுக்கு சென்னையில் கொரோனா தொற்று ஏற்படுவதால் முதல்நிலை பாசிட்டிவ் உள்ளவர்கள் அங்கு தங்க வைக்கப் படுவார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.