தமிழ்நாடு

தொடங்கியது திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை

தொடங்கியது திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை

webteam

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளனர். திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி, டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

அதேபோல் காங்கிரஸ் சார்பில், உம்மன் சாண்டி, ரன் தீப் சிங் சுர்ஜிவாலா, கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஏற்கெனவே கடந்த 2016 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 47 இடங்களை பெற்று 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிந்தது குறிப்பிடத்தக்கது.