தமிழ்நாடு

சர்ச்சைகளுடன் நீட் தேர்வு நிறைவு... சட்டையை கிழித்து தேர்வெழுதிய மாணவர்கள்

சர்ச்சைகளுடன் நீட் தேர்வு நிறைவு... சட்டையை கிழித்து தேர்வெழுதிய மாணவர்கள்

Rasus

பல்வேறு தரப்பில் எழுந்த கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் இன்று நடைபெற்ற நீட் தேர்வு சர்ச்சைகளுடன் நிறைவுற்றது.

தமிழகத்தில் சுமார் 88 ஆயிரம் மாணவர்கள் தேர்வை எழுதினர். முழுக்கை சட்டை அணிந்துகொண்டு தேர்வு எழுத தடைவிதிக்கப்பட்டிருந்ததால் பல இடங்களில் மாணவர்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. நாடு முழுவதும் 104 நகரங்களிலும் தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட 8 நகரங்களிலும் நீட் தேர்வு நடைபெற்றது.

தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பலரும் அசவுகரியத்திற்குள்ளாகினர். முழுக்கை சட்டை அணிந்துகொண்டு தேர்வு அறைக்குள் செல்லக்கூடாது என்ற விதிமுறை தெரியாமல் வந்த பல மாணவர்கள் சட்டையின் கைப் பகுதியை கிழித்துக்கொண்டு தேர்வு எழுதச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

எய்ம்ஸ் ஜிப்மர் தவிர நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது.