தமிழ்நாடு

நீட் தேர்வு: தோல்வி பயத்தால் தற்கொலைக்கு முயன்ற செங்கல்பட்டு பள்ளி மாணவி

kaleelrahman

நீட் தேர்வு எழுதிய 17 வயது மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 40 சதவீத தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன். சேத்துப்பட்டு எம்.சி.சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் இவரது மனைவி ஷிபா மாடம்பக்கத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர்களது மகள் அனு சேத்துப்பட்டு எம்சிசி பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் அனு கடந்த 12 ஆம் தேதி ஆவடி நீட் தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதியுள்ளார். முதன் முறையாக நீட் தேர்வு எழுதிய இவர், தோல்வி பயம் காரணமாக, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து 40 சதவீத தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு ஆறுதல் கூறினார். இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரபரப்பாக காணப்பட்டது.