தமிழ்நாடு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம் 

webteam

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லூரியில் ஒருவர் மாணவராக சேர்ந்ததை புதிய தலைமுறை கள ஆய்வு செய்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இந்த விவகாரம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் உதித் சூர்யா தலைமறைவாகியுள்ள நிலையில், அவரது தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையிடம் மருத்துவ அதிகாரிகள் இந்த விவகாரம் வெளியாகும் முன்பு நடத்திய விசாரணையின் விவரங்களை, அவர்களிடமிருந்து காவல்துறையினர் பெற்றுள்ளனர். தொடர்ந்து உதித் சூர்யாவுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் அதற்கான ஆவணங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் விசாணை நடத்தி வந்த நிலையில், தற்போது சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.