தமிழ்நாடு

அதிகாரிகள் உதவியின்றி நீட் ஆள்மாறாட்டத்துக்கு வாய்ப்பில்லை - உயர்நீதிமன்றம் 

webteam

அதிகாரிகள் உதவியில்லாமல் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து உயர்நீதிமன்றம், சிபிசிஐடியிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தது. அதாவது, “நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஒரே ஒரு இடைத்தரகருக்கு மட்டும்தான் தொடர்பு என்பது நம்பும்படியாக இல்லை. இதில் எத்தனை மாணவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். யார் யாருக்கு தொடர்பு உள்ளது. எவ்வளவு பணம் கை மாறியது?” என நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைத்தனர். 

மேலும் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் விவகாரத்தில் அக்டோபர் 15-ஆம் தேதி சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து மற்ற மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாணவர்கள் சேர்ந்துள்ளனரா என்று மாநிலம் முழுவதும் அதிரடி விசாரணை நடைபெற்றது. இதில் இர்ஃபான் என்பவரும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.