தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக முதல்வர் துணிந்து சட்டம் இயற்ற வேண்டும்- தொல்.திருமாவளவன்

kaleelrahman

நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக முதல்வர் துணிந்து சட்டம் இயற்ற வேண்டும் என தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் அங்கனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், அவரது தந்தையின் 11-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது...

“நாளை தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்கள், நீர்பாசனத் துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம். அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நான் கலந்து கொள்கிறேன். தமிழக மக்கள் நலன்கருதி மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை பிரதமர் மோடி தடுக்க வேண்டும். தமிழகத்திற்கு எதிராக செயல்படக் கூடாது என்பது கோரிக்கை. செயல்பட மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

2007-ஆம் ஆண்டு தமிழகத்தில் பொறியியல் தேர்வுக்கான நுழைவுத் தேர்வு கூடாது என தடை சட்டம் கொண்டுவந்த அரசு திமுக. அதேபோல் நீட் தேர்வு வேண்டாம் என இன்றைய முதல்வர் ஸ்டாலின் துணிந்து சட்டம் இயற்ற வேண்டும். நீட் தேர்வை விலக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களை காக்க வேண்டும்” எனக் கூறினார்.

கொரோனா தொற்று ஆபத்தானது எனவே பள்ளி திறப்பதில் அவசரம் தேவை இல்லை என்பது விடுதலை சிறுத்தையின் வேண்டுகோள் என்று தெரிவித்தார்.