தமிழ்நாடு

“தமிழகத்தில் கூடுதலாக 4 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள்” - அமைச்சர் தர்மேந்திர பிரதான்

webteam

தமிழகத்தில் 4 நகரங்களில் கூடுதலாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று என்னை சந்தித்தார். அப்போது நீட் தேர்வு உட்பட தமிழ்நாடு பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். தமிழகத்தில் 4 நகரங்களில் கூடுதலாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய இடங்களில் 4 கூடுதல் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தெரிவித்திருக்கிறேன். நீட் தேர்வு எழுதும் மொழிகள் 11 லிருந்து 13 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ் மொழியிலும் தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு எழுதும் மையங்களில் எண்ணிக்கையும் அதிகரிக்கும். நகரங்களில் எண்ணிக்கை 14 லிருந்து 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளின் பின்னணி குறித்து அவருக்கு விளக்கினோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நீட் தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார்.