நீட் தேர்வு மையத்தை நினைத்து தமிழக மாணவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசு பெரிய அளவில் உதவ முன் வரவில்லை. இருப்பினும் ஏகப்பட்ட தன்னார்வலர்கள் மாணவ மாணவியருக்கு உதவ முன்வந்துள்ளனர்.
சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது இளைஞர்கள் விரைந்து செயல்பட்டு சென்னையை மீட்டனர். ஃபேஸ்புக், வாஸ்ட்ஆப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றிணைந்த இளைஞர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த நேரத்தில் தேவையான உதவி செய்தனர். தற்போது நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு ராஜஸ்தான், கேரளா போன்ற வெளிமாநிலங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாளை மறுதினம் காலை 8.30 மணிக்க நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில், நாளைக்கே நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டியது கட்டாயம். நீட் மையங்கள் வெளிமாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ளதால் என்ன செய்வதேன்றே தெரியாமல் தமிழக மாணவர்கள் பெரிதும் தவித்து வரும் நிலையில் தமிழக அரசு மாணவர்களுக்கு பெரிய அளவில் உதவ முன்வரவில்லை. இருப்பினும் ஏகப்பட்ட தன்னார்வலர்கள் மாணவ மாணவியருக்கு உதவ முன்வந்துள்ளனர்.
நீட் தேர்வு எழுத ராஜஸ்தானில் மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் மாணவ, மாணவியருக்கு உதவ தயாராக இருப்பதாக அம்மாநில தமிழ்ச்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கு உணவு, உறைவிடம், வாகன உதவி என அனைத்தும் செய்துத் தரப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ராஜஸ்தானுக்கு தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொண்டால் உதவி கிடைக்கும்.
முருகானந்தம்- 9790783187
சௌந்தரவல்லி -8696922117
பாரதி- 7357023549
டிடிவி தினகரனை தொடர்பு கொள்ளலாம்
நீட் தேர்வுக்காக கேரளா செல்லும் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய தயார் என ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனை தொடர்புகொள்ள.. 93631 09303, 99942 11705, 89034 55757, 73738 55503
உதவும் நடிகர் பிரசன்னா
நீட் தேர்வுக்காக வெளிமாநிலம் செல்ல இருக்கும் ஏழை மாணவர்களுக்கு பயணச் செலவை ஏற்றுக் கொள்வதாக நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வெளி மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக மாணவர்களில் இரண்டு பேருக்கு பயணச் செலவை கொடுத்து உதவுவதாக நடிகர் பிரசன்னா கூறியுள்ளார் இதற்காக தம்மை ட்விட்டர் இன்பாக்ஸ்சில் ஹால்டிக்கெட் உள்ளிட்ட விபரங்களுடன் தொடர்புகொள்ளும்படி நடிகர் பிரசன்னா கேட்டுக்கொண்டுள்ளார்.
நாகை தொகுதியில் இருந்து நீட் தேர்வு எழுதுவற்காக வெளி மாநிலங்களுக்கு செல்ல உதவி தேவைப்படும் மாணவர்கள் தன்னை உடனே அணுகலாம் என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். தொடர்புக்கு: 9940738572, 9092020923, 04365-247788
இதனிடையே நெல்லை மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து உதவி செய்து தரப்படும் என நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.