நீட் தேர்வு எழுத சென்ற மாணவன் புகைப்படம் இல்லாததால் வெளியேற்றப்பட்ட நிலையில், புகைப்படம் எடுக்க 40 ரூபாய் கொடுத்து உதவிய காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் கடும் சோதனைகளுக்குப் பின்னர் தேர்வெழுதும் மையங்களில் அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 711 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். இதில் மாணவர்கள் 53 ஆயிரத்து 470 பேர். மாணவிகள் 81 ஆயிரத்து 241 பேர். அவர்களின் வசதிக்காக தமிழகத்தில் மட்டும் 14 மாவட்டங்களில் 188 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கோவையில் உள்ள நேஷனல் மாடல் பள்ளியிலும் நீட் நுழைவுத் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்து. அங்கு பாதுகாப்பு பணியில் பா.சரவணகுமார் என்ற காவலர் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர், புகைப்படம் இல்லாததால் வெளியேற்றப்பட்டார். இதை பார்த்த காவலர் சரவணகுமார் உடடினயாக அந்த மாணவருக்கு 40 ரூபாய் வழங்கி புகைப்படம் எடுக்க உதவியோடு மாணவரை தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்தார். சிறிய உதவியாக இருந்தாலும் மாணவருக்கு தக்க நேரத்தில் உதவிய காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.