தமிழ்நாடு

நீட் தேர்வு பயிற்சிக்கு 2 தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

webteam

அரசு பள்ளி மாணவர்களின் நீட் தேர்வு பயிற்சிக்காக 2 தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக அரசு தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் அதனை ஆதரிக்கும் வகையில் பல திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து வருகிறது. அதன் தொடர்சியாக இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தனது ட்விட்டரில் “நீட் தேர்வு பயிற்சி திட்டத்தை செயல்படுத்த 2 தனியார் நிறுவனங்களுடன், பள்ளி கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும் வரும் ஜனவரி மாதத்திற்கு பிறகு அனைத்து பள்ளிகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும்” என்றும் அவர் செய்தி வெளியிட்டுள்ளார்.