தமிழ்நாடு

நீட் தேர்வு தொடர்பான வழக்குகள்‌: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

நீட் தேர்வு தொடர்பான வழக்குகள்‌: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

webteam

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் இருக்கும் நீட் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன‌. 

உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் இந்த உத்‌தரவை வெளியிட்டுள்ளார். நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என, மதுரையைச் சேர்ந்த சந்தியா, திருச்சியைச் சேர்ந்த ‌சக்தி மலர்க்கொடி உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்‌கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட ‌இடைக்கால தடை விதித்து மே 24ல் உத்தரவிட்டது. வழக்கு விசாரணை வரும் 12 ஆம் தேதிக்கு ஒத்‌திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.