தமிழ்நாடு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் ஜாமீன் கேட்ட 4 பேர் மனு தள்ளுபடி 

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் ஜாமீன் கேட்ட 4 பேர் மனு தள்ளுபடி 

webteam

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள 4 மாணவர்கள் மற்றும் அவர்களது‌ பெற்றோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குற்றம்சாட்டுப்பட்டு தற்போது சிறையில் உள்ள பிரவீன் அவரது தந்தை சரவணன், ராகுல் அவரது தந்தை டேவிஸ், இர்பான் அவரது தந்தை முகமது சபி, பிரியங்கா அவரது தாய் மைனாவதி ஆகியோர் ஜாமீன் கேட்டு தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

இந்த மனுக்கள்‌ விசாரணைக்கு வந்த போது, வழக்கில் தொடர்புடைய மேலும் ‌சிலரைக் கைது செய்ய வேண்டி உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டாம் என சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து 8 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். 

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட உதித் சூரியாவுக்கு உயர் நீதிமன்ற கிளை ஜாமீன் வழங்கியது. உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் உள்ளிட்ட 9 பேரின் நீதிமன்ற காவல் முடிவடைவதால் அனைவரையும் நாளை தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் ஆஜர்படுத்த உள்ளனர்.