தமிழ்நாடு

“பிரித்தாள்வதை கைவிட்டு, பொருளாதாரத்தை கையிலெடுங்கள்” - மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

“பிரித்தாள்வதை கைவிட்டு, பொருளாதாரத்தை கையிலெடுங்கள்” - மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

webteam

மக்கள் விரோத போக்கை கைவிட்டுவிட்டு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பா‌க ட்விட்‌டரில் பதிவிட்டுள்ள அவர், இந்திய பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக சரிந்துள்ளதாகவும், ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் ஐஎம்எஃப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது பொருளாதார வளர்ச்சியில் பாஜக கவனம் செலுத்தாததை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசின் நிர்வாக திறமையின்மையால், தமிழகத்தின் வளர்ச்சியும் குன்றியுள்ளதாக ஸ்டாலின் சாடியுள்ளார். போராடத் தூண்டுவது, பின் அதை ஒடுக்குவது போன்ற மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுவதை விட்டு விட்டு, நாட்டின் பொருளாதாரத்தை மத்திய அரசு மேம்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.