தமிழ்நாடு

எம்எல்ஏ-க்களை சுதந்திரமாக விடக்கோரி போலீசில் புகார்

எம்எல்ஏ-க்களை சுதந்திரமாக விடக்கோரி போலீசில் புகார்

Rasus

அதிமுக எம்எல்ஏக்களை சுதந்திரமாக நடமாட விடக்கோரி, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்எல்ஏ புகார் மனு அளித்துள்ளார்.

சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் கூவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் வெளியுலக தொடர்பு இன்றி அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், இவர்கள் அனைவரையும் சுதந்திரமாக நடமாட விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சண்முகநாதன் புகார் மனு அளித்துள்ளார்.

மேலும் அந்த மனுவில், கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், தங்களிடம் மிரட்டி கையெழுத்து பெற்றதாகவும், இதனால், சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த மனுவை, காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாகவும், கூடுதல் ஆணையர் சங்கர், பெற்றுக்கொண்டதா‌வும், பின்னர் பேசிய சண்முகநாதன் தெரிவித்தார்.

அதிமுக-வில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா தலைமையில் அதிமுக-வினர் இரு பிரிவுகளாக பிரிந்துள்ளனர். இதில் சண்முகநாதன் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.