ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடி வரும் நெடுவாசல் கிராமத்தினர் வரும் ஒன்றாம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசவிருக்கின்றனர்.
நெடுவாசலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுவினரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நலவாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சரை சந்திக்க புதன் கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, 6 பேர் கொண்ட குழுவினர், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுகின்றனர்.
முன்னதாக, இன்றைய தினம் முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். ஆனால், முதலமைச்சரின் டெல்லி பயணம் காரணமாக போராட்டக்காரர்களை முதலமைச்சரால் சந்திக்க முடியவில்லை என்று, போராட்டக்காரர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.