ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக் முகநூல்
தமிழ்நாடு

ஜாபர் சாதிக் குடோனில் NCB அதிகாரிகள் சோதனை!

ஜெனிட்டா ரோஸ்லின்

டெல்லியில் மேற்கு டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைக்கபட்டிருந்த வழக்கில், ரூ.2,000 கோடி போதைப்பொருள்களை கடத்தியதாக திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கடந்த 9-ம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் இவரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் சென்னையில் இவருக்கு பல போதைப்பொருள் குடோன்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த குடோன்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு, முதலாவதாக சென்னை பெருங்குடியில் உள்ள குடோனில் இன்று காலை முதலே சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச்சோதனையானது தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. முன்னதாக நேற்று சென்னை மற்றும் திருச்சியில் உள்ள லாஜிஸ்டிக் நிறுவன குடோனை மொத்தமாக நிர்வகித்து வரும் தேனாம்பேட்டையை சேர்ந்த சதா (இவர்தான் ஜாபர் சாதிக்கின் முக்கிய கூட்டாளி) கைது செய்யப்பட்டார். இந்த சதா கடந்த பத்து வருடங்களாக ஜாபர் சாதிக்குடன் இணைந்து சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.