தமிழ்நாடு

நக்சல் அமைப்பினர் எச்சரிக்கை : தமிழக - கேரள எல்லையில் பதற்றம்

நக்சல் அமைப்பினர் எச்சரிக்கை : தமிழக - கேரள எல்லையில் பதற்றம்

webteam


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள தமிழக-கேரள எல்லையில் நக்சல் தடுப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழக - கேரளா எல்லைப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்தப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் அடிக்கடி நுழைந்து பழங்குடியினரின் கிராமங்களில் மறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்காக நக்சல் தடுப்பு பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், காவல்துறையினர் தாக்குதலில் தங்கள் அமைப்பினர் உயிரிழந்ததற்கு பழிவாங்குவோம் என்று நக்சல் அமைப்பினர், கேரள எல்லையில் உள்ள மலைக் கிராமத்தில் நோட்டீஸ் ஒட்டிச்சென்றுள்ளனர். இதனால் தமிழக-கேரள எல்லையில் இருமாநில வனத்துறையினரும், நக்சல் தடுப்புப் பிரிவினரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பழங்குடியின மக்களிடம் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள காவல்துறையினர், சந்தேகத்திற்குரிய ஆட்கள் நடமாட்டம் தெரிந்தால் உடனே புகார் தெரிவிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.