தமிழ்நாடு

நவநீத கிருஷ்ணன் அதிமுக பொறுப்பிலிருந்து விடுவிப்பு

Sinekadhara

நவநீத கிருஷ்ணன் எம்.பி, அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பிலிருந்து நவநீத கிருஷ்ணன் எம்.பி விடுவிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதிமுக திமுக எம்.பி டிகேஎஸ் இளங்கோவன் இல்ல திருமண விழாவில் நவநீத கிருஷ்ணன் பங்கேற்ற நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.