மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தேசிய பாதுகாப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதேநேரத்தில் தீ விபத்தால் சேதமடைந்த கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேசிய பாதுகாப்புக் குழுவின் எஸ்பி ராஜேஷ் குமார் பாண்டே, ஆய்வாளர் கவுதம், 2 கமாண்டோக்கள் இன்று காலை கோயிலுக்குள் தீவிபத்து நடந்த பகுதிகளை பார்வையிட்டனர். மேலும், கோயில் உதவி ஆணையர் நடராஜனிடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், தீவிபத்து பற்றியும் விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து குறித்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அனைத்து கோயில்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தை அடுத்து நெல்லையப்பர் கோயிலில் கற்பூரம் ஏற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.