தமிழ்நாடு

சென்னை ரயில் நிலையம் வந்து சேர்ந்தது மீட்கப்பட்ட நடராஜர் சிலை

webteam

ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை, இன்று  சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது.

37 வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலின் கருவறையின் இரும்புக்கதவை உடைத்து நடராஜர் சிலை திருடப்பட்டது. இந்தச் சிலையை கண்டுபிடிக்க முடியவில்லை என நெல்லை காவல்துறை 1984ஆம் ஆண்டு வழக்கை மூடியதாகவும், 35 வருடத்திற்குப் பிறகு இதை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 

இந்தச் சிலையை ஆஸ்திரேலியாவிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சிலை ஆஸ்திரேலியாவிலிருந்து  டெல்லி கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மீட்கப்பட்ட நடராஜர் சிலை சென்னை ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.