நாசர் - விஷால் முகநூல்
தமிழ்நாடு

விஷால் குறித்து அவதூறு | யூடியூப் சேனல்கள் மீது புகார் அளித்த நாசர்!

அவதூறு பரப்புதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PT WEB

நடிகர் விஷால் குறித்து அவதூறு தகவல்கள் பரப்பியதாக நடிகர் சங்கத் தலைவர் நாசர் அளித்த புகாரின் பேரில் யூடியூப் சேனல்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதகஜராஜா திரைப்பட வெளியீட்டின் போது நடைபெற்ற நிகழ்ச்சியில் உடல் நலக்குறைவுடன் விஷால் பங்கேற்றது சர்ச்சையானது. விஷால் மதுப்பழக்கத்துக்கு ஆளானதால்தான் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக யூடியூபர் சேகுவாரா பேட்டியளித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் நடிகர் நாசர் அளித்த புகாரின் பேரில் யூடியூபர் சேகுவேரா மற்றும் kings wood news, youtamil oodaruppu ஆகிய யூடியூப் சேனல்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவதூறு பரப்புதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.