புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அரசியல் சட்டவரம்பை மீறி செயல்படுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடிதம் அனுப்பி உள்ளனர்.
உள்துறை அமைச்சகம் எடுக்கும் நடவடிக்கையை அடுத்து அடுத்தக் கட்ட முடிவை அறிவிக்க இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுவது அரசின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக விளங்குவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட தடை விதிக்கும் முதலமைச்சர் நாராயணசாமியின் உத்தரவை கிரண்பேடி ரத்து செய்ததைதொடர்ந்து, இருவருக்கும் மோதல் வலுத்திருக்கிறது.