மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கியிருந்த இன்னோவா காரை அதிமுக செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் திரும்ப ஒப்படைத்துள்ளார்.
மதிமுக-விலிருந்து விலகி அதிமுக-வில் இணைந்த போது நாஞ்சில் சம்பத்திற்கு ஜெயலலிதா இன்னோவா கார் வழங்கினார். மேலும் அவருக்கு அதிமுக செய்தித் தொடர்பாளர் பதவியும், தலைமைக் கழகப் பேச்சாளர் பதவியும் கிடைத்தது
இந்நிலையில் ஜெயலலிதா வழங்கிய இன்னோவா காரை நாஞ்சில் சம்பத் தற்போது கட்சியின் தலைமை அலுவலத்தில் திரும்ப ஒப்படைத்துள்ளார். மேலும் அதிமுக-விலிருந்து நாஞ்சில் சம்பத் விலகியதாகவும் தகவல் வெளியானது.
இது குறித்து புதிய தலைமுறை தொலைபேசி வாயிலாக அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, பிரசாரத்திற்காகவே தனக்கு கார் வழங்கப்பட்டதாகவும், தற்போது பிரசாரம் ஏதும் இல்லை என்பதால், காரை ஒப்படைத்து விட்டதாகவும் கூறியுள்ளார். கட்சி வழங்கிய காரை சொந்த உபயோகத்திற்கு ஒருபோதும் பயன்படுத்தியதில்லை என்றும் நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார்.