தமிழ்நாடு

வைகோ- நாஞ்சில் சம்பத் திடீர் சந்திப்பு

வைகோ- நாஞ்சில் சம்பத் திடீர் சந்திப்பு

webteam

மதிமுகவில் மீண்டும் இணைய இருப்பதாக செய்தி வெளியான நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வைகோவை சந்தித்தார், நாஞ்சில் சம்பத்.

மதிமுகவில் இருந்த நாஞ்சில் சம்பத், 2012 ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவர் மறைவுக்குப் பின் சசிகலா தலைமையிலும், டிடிவி தினகரன் அணியிலும் செயல்பட்டு வந்தார். டிடிவி அணியில் முக்கியத்துவம் இல்லாத காரணத்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அவர் தெரிவித்தார். 

அதன் பின்னர் மதிமுகவில் இணைவதாக வெளியான தகவலையும் நாஞ்சில் சம்பத் மறுத்தார். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவர் சந்தித்து பேசினார்.