அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூரில் சிறுமி நந்தினி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒரு நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தினி. இவர் காணாமல் போனதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையில், ஜனவரி 14ம் தேதி கீழமாளிகை அருகே கிணற்றில் நந்தினியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன் ஏற்கெனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். தற்போது 2வது நபராக, மணிவண்ணன் என்பவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க அரியலூர் ஆட்சியர் சரவணவேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.