தமிழ்நாடு

சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம்: போராட்டம் நடத்த முயன்ற நந்தினி உள்ளிட்ட 2 பேர் கைது

webteam

விழுப்புரத்தில் 15 வயது சிறுமி எரித்துக் கொல்லப்பட்டதை கண்டித்து மதுரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்ற நந்தினி மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரத்தில் 15 வயது சிறுமியின் கைகளை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர செயல் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்படர் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் சிறுமி எரித்து கொல்லப்பட்டதற்கு நியாயம் வேண்டும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும், டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது, டாஸ்மாக் வழக்கில் மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக மதுரையை சேர்ந்த நந்தினி அறிவித்திருந்தார்.

அதன்படி உண்ணாவிரதத்திற்கு செல்வதற்காக மதுரை புதூர் பகுதியில் இருந்து புறப்பட்ட நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தனை புதூர் காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.