சென்னையில் இன்று நடைபெறும் சிறப்பு முகாமில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெயர்களை சேர்க்கலாம். 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் புதிய பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். முகாம்களுக்கு செல்ல முடியாதவர்கள் இணையதளம் அல்லது வாக்காளர் உதவி செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெயர்களை சேர்க்கும் வகையில், சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சென்னையில் சுமார் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் விடுப்பட்டபெயர்களை சேர்ப்பதற்கான சிறப்புமுகாம் சென்னையில் இன்றும் நடைபெறுகிறது.
சென்னை மாவட்டத்தின் 16 சட்டமன்றதொகுதிகளில் உள்ள அனைத்துவாக்குச்சாவடிகளிலும் புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம்,பெயர் நீக்கம் ஆகியவற்றுக்கு உரியபடிவம் மற்றும் ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாம்களுக்கு செல்ல முடியாதவர்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் அல்லது வாக்காளர் உதவி செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் எனகூறப்பட்டுள்ளது.