தமிழ்நாடு

நாமக்கல்: தடுப்பூசிகள் இருப்பு இல்லை என திருப்பி அனுப்பப்படுவதாக பொதுமக்கள் குற்றசாட்டு

நாமக்கல்: தடுப்பூசிகள் இருப்பு இல்லை என திருப்பி அனுப்பப்படுவதாக பொதுமக்கள் குற்றசாட்டு

kaleelrahman

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில்; கடந்த 3 நாட்களாக கொரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லை என்று திருப்பி அனுப்புவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். தடுப்பூசிகள் இல்லாததால் அரசு மருத்துவமனைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் சூழலில், அரசு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மூன்று நாள் திருவிழாக்களை நடத்தியது. இதையடுத்து பொதுமக்கள் ஆர்வமுடன் முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள சீதாராம்பாளையம் மற்றும் சூரியம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த நான்கு நாட்களாக தடுப்பூசிகள் இருப்பில் இல்லை என்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்களிடம் கூறி திருப்பி அனுப்பப்படுகிறார்கள். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக பொதுமக்கள் கூட்டம் பெருமளவு கூடியிருக்கும் ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதால் தற்போது பொதுமக்கள் யாரும் இல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தனியார் வசம் இருந்த தடுப்பூசிகளும் முடிந்துவிட்ட நிலையில் முதல் கட்ட தடுப்பூசி போட்டவர்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசி போட முடியாமல் தவித்து வருகின்றனர் கோவாக்சின் மற்றும் கோவிட்ஷீல்டு ஆகிய இரண்டு மருந்துகளும் இருப்பு இல்லாமல் தற்போது பொது மக்களை நாளை வந்து பாருங்கள் என்று அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ளவர்கள் திருப்பி அனுப்பி வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள் நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் தடுப்பூசிகள் விருப்பு இல்லாமல் உள்ளது.

முதல் கட்ட தடுப்பூசி போட்டவர்கள் 28 நாள் கழித்து மீண்டும் இரண்டாம் கட்ட தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவித்து இருந்த நிலையில் தற்போது 58 நாட்கள் கழித்து தடுப்பூசி போட்டுக்கொண்டால் போதும் என்று பொதுமக்களை திருப்பி அனுப்புவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்