தமிழ்நாடு

இடிந்து விழுந்த வகுப்பறை கட்டடம்: கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம்

இடிந்து விழுந்த வகுப்பறை கட்டடம்: கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம்

webteam

நாமக்கல்லில் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை கட்டடம் இடிந்து விழுந்து பல நாட்களாகியும் பள்ளி நிர்வாகம் கண்கொள்ளாமல் இருப்பதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அண்ணா சாலையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறைக் கட்டடத்தின் முன்பகுதி, கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக இடிந்து விழுந்தது. இதையடுத்து இடிந்த கட்டடத்தை மீண்டும் புதுப்பித்து கட்டுமாறு மாணவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பலமுறை தலைமை ஆசிரியரிடம் முறையிட்டும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்தக் கட்டடம் அருகே மாணவர்கள் செல்லும்போது எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மாணவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் வகுப்பறை கட்டடத்தை கட்டித்தருமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் நாகை மாவட்டத்தின் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை கட்டடம் இடிந்து, 8 ஊழியர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.