ராசிபுரம் அருகே கொடுத்த பணத்தை திருப்பி தராததால் லாரி டிரைவர் கடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தையடுத்துள்ள குச்சிகாடு பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் சுரேஷ்சை லாரி உரிமையாளர் சேகர் என்பவரின் ஆட்கள் கடத்தியுள்ளதாகப் புகார் கூறப்படுகிறது. சுரேஷ் மற்றும் மூன்று லாரி ஓட்டுனர்களுக்கு சேகர் என்ற லாரி உரிமையாளர் பத்தாயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்து லாரி ஓட்டுவதற்காக சென்னைக்கு அனுப்பியிருக்கிறார். அவர்கள் காய்ச்சல் காரணமாக லாரி ஓட்டாமல் திரும்பி வந்துள்ளனர். லாரி ஓட்டாதததால் அவர்களிடம் சேகர் கொடுத்த முன்பணத்தைக் கேட்டிருக்கிறார். இந்தப் பிரச்னை நீடித்துக் கொண்டிருந்த நிலையில்கடந்த திங்களன்று ஆட்டோவில் வந்த சிலர், சுரேஷை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. 45 ஆயிரம் ரூபாய் பணம் தந்தால்தான் சுரேஷை விடுவிப்பதாக மிரட்டல் விடுப்பதாக அவரது பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். மகனை மீட்டுத்தரக்கோரி அவர்கள் நாமகிரிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.