நாமக்கல்: செல்லம்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளியேறும் கழிவு நீரினால், பாதிக்கப்படும் விவசாய நிலங்கள்.
நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி கிராமத்தில் விவசாய நிலப்பகுதிக்கு அருகே தனியார் ஆலை ஒன்று கடந்த 20 ஆண்டு காலமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது அங்கேயே சேகரிக்கப்படு வந்துள்ளது. அதனால் கழிவு நீரை பூமியானது இழுத்துக்கொண்டதில், கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தடி நீரானது தொடர்ந்து மாசுப்பட்டு வந்ததுடன், அப்பகுதியில் இருந்த ஏரி குளத்தின் நீரும் மாசடைந்து காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆலையிலிருந்து வெளியேறும் அதிகப்படியான கழிவு நீர் கலந்த தண்ணீரைக் குடித்த ஆடு மாடுகளும் நோய் வாய்ப்பட்டு இறந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையடைந்துள்ளனர்.
மேலும், அதிகரித்த ஆலையின் கழிவு நீரானது அப்பகுதியில் இருக்கும் வயல் வெளிகளில் ஊடுருவி செல்கிறது. இதனால் வயலில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் பயிர்கள் சேதமாவதுடன், அவர்களின் பொருட்களும் வீணாகி வருகிறது. கழிவு நீர் சேர்வதால் கொசுத்தொல்லையால் அப்பகுதி மக்கள் கடும் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் புதிய பயிற்கள் பயிரிடும் போது பயிர்கள் நோய் தாக்குதலுக்கு ஆளாகி உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கலெக்டர் மற்றும் விவசாயதுறைக்கு பலமுறை கடிதம் எழுதியும், அதற்காக எந்தவித நடவடிக்கையும் இன்று வரை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும், இதற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்