தமிழ்நாடு

ஆழ்துளைக் குழாயில் விழுந்த குழந்தையை மீட்க எளிய கருவி - நாமக்கல் ஓவியர் முயற்சி

ஆழ்துளைக் குழாயில் விழுந்த குழந்தையை மீட்க எளிய கருவி - நாமக்கல் ஓவியர் முயற்சி

rajakannan

ஆழ்துளைக் குழாயில் விழுந்த குழந்தையை மீட்க எளிய வகை கருவியை தயாரித்துள்ளதாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஓவியர் நடராஜன் என்பவர் தெரிவித்துள்ளார். 

திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க நான்காவது நாளாக பணிகள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் குழந்தையை மீட்க ஒரு எளிய வகை கருவியை கண்டுபிடித்துள்ளதாக திருச்செங்கோட்டை சேர்ந்த நடராஜ் என்ற ஓவியர் கூறியுள்ளார்.

ஒரு சிறிய கம்பி வடிவிலான இந்தக் கருவியை கேமரா பொருத்தி ஆழ்துளைக் கிணற்றுக்குள் அனுப்பினால், அதிலுள்ள சிறிய கம்பிகள் சிறுவன் உள்ள இடத்திற்கு சென்று தானாக வெளியாகும். அதனை வைத்து அந்தக் கம்பிகளின் பிடிப்பில் இருந்து சிறுவனை மீட்டு வெளியில் கொண்டு வர முடியும் என மாதிரிகளை செய்து காண்பித்துள்ளார் நடராஜ்.

எளிய முறையில் தயாரிக்க கூடிய இந்தக் கருவியை பயன்படுத்தி சிறுவனை மீட்க அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.