திருச்செங்கோட்டில் தூய்மைப்பணி மேற்கொள்வதாக மரங்களை வேருடன் பிடுங்கிவிட்டதாக நகராட்சி மீது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தூய்மைப்பணி செய்வதாகக் கூறி மரங்களை வேருடன் பிடுங்கி விட்டதாக எட்டிமடை புத்தூர் பகுதி மக்கள் நகராட்சி மீது குற்றம்சாட்டியுள்ளனர். டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டதாகவும், அப்போது சுமார் 30 மரங்களை வெட்டி விட்டதாகவும் மக்கள் புகார் கூறியுள்ளனர். மேலும் கழிவு நீர் கால்வாய் இல்லாமல் அவதியடைந்துள்ளதாக கூறும் மக்கள், அடிப்படை வசதிகளை செய்து தராமல், மரங்களை வெட்டிச் சென்றது வேதனையளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.