தமிழ்நாடு

நாமக்கல்: 'வலிமை' முதல் காட்சி வெளியிட தாமதமானதால் தியேட்டரில் நாட்டு வெடி வெடிக்க முயற்சி

நாமக்கல்: 'வலிமை' முதல் காட்சி வெளியிட தாமதமானதால் தியேட்டரில் நாட்டு வெடி வெடிக்க முயற்சி

JustinDurai

நாமக்கல் கே.எஸ் திரையங்கில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' படத்தின் முதல் காட்சி வெளியிட தாமதமானதால் தியேட்டரின் கதவில் நாட்டு வெடியை கட்டி வெடிக்க முயற்சித்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள ‘வலிமை’ படம் இன்று வெளியாகியுள்ளது. இதனையொட்டி தமிழகத்தின் பல திரையரங்குகளில் ரசிகர்களுக்காக அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்பட்டன.

இந்நிலையில், நாமக்கல் கே.எஸ் திரையங்கில் 'வலிமை' படத்தின் முதல் காட்சி திரையிட தாமதமானதால் தியேட்டரின் கதவில் நாட்டு வெடியை கட்டி வெடிக்க முயற்சித்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.  வெடியை காவல் துறையினர் அகற்றிய போது ரசிகர்களுக்கும் , காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இருந்த போதிலும் கதவை திறக்காததால் ரசிகர்கள் சுவர் ஏறி குதித்தும், வெளியேறும் கதவின் மேல் ஏறியும் குதித்து உள்ளே சென்றனர். படத்தை திரையிட உரிமம் இறுதி நேரத்தில் கிடைத்ததால் முதல் காட்சி வெளியிட தாமதம் ஆனதாகவும், இதனால் ரசிகர்களை உள்ளே விட முடியவில்லை என தியேட்டர் தரப்பில் தெரிவித்தனர்.