தமிழ்நாடு

நாமக்கல்: சாலையில் கிழித்து எறியப்பட்ட டோக்கன்கள்; திமுக- அதிமுக வாக்குவாதம்

நாமக்கல்: சாலையில் கிழித்து எறியப்பட்ட டோக்கன்கள்; திமுக- அதிமுக வாக்குவாதம்

kaleelrahman

நாமக்கல்லில் திமுகவினர் வழங்கிய டோக்கன்போல அதிமுகவினர் போலியான டோக்கன் தயாரித்து அதை கிழித்து சாலையில் எறிந்ததாகக் கூறி இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டதால் காவல்துறையினர் இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினர்.

நாமக்கல் தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை முதல் தொடங்கி விறு விறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் நாமக்கல் கோட்டை சாலை, உழவர் சந்தை பகுதிகளில் திமுகவினர் பொதுமக்களுக்கு தங்க நாணயம் டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக வழங்கிய டோக்கனைபோல் அதிமுகவினரும் போலியாக டோக்கன்கள் தயாரித்து அதை நாமக்கல் நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் கிழித்து எறிந்துள்ளனர். இதனை கண்ட திமுகவினர் அதிமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த நாமக்கல் காவல் ஆய்வாளர் குமார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.