தமிழ்நாடு

காவி கனவு கானலாகும்: நமது எம்ஜிஆர் விமர்சனம்

காவி கனவு கானலாகும்: நமது எம்ஜிஆர் விமர்சனம்

Rasus

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், அதன் பின்னணியில் பாரதிய ஜனதா இருப்பதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான, நமது எம்ஜிஆர் விமர்சித்துள்ளது.

காவிக் கூட்டத்தின் கனவு கானல் நீராகும் என்று குறிப்பிட்டு அதில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அதிமுக அம்மா அணியின் வெற்றி ஆர்கே நகரில் உறுதி என்பதால், அதற்காக உழைக்கும் அமைச்சர், மாவட்ட செயலாளர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் 3-வது பெரிய இயக்கமான அதிமுகவை, எட்டப்பன் மூலம் கைப்பற்ற பாரதிய ஜனதா கட்சி கனவு காண்பதாக நமது எம்ஜிஆரில் கூறப்பட்டுள்ளது