மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு பிறந்த நாளில், அவரை நேரில் சந்தித்து வாழ்த்தி மகிழ்ந்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று வெளிட்ட பதிவு:
"பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் தொண்டறமே வாழ்வெனக் கொண்டவர். எளிமை, தியாகம், நேர்மை இவற்றின் இலக்கணமாக அரசியல் கடலின் கலங்கரை விளக்கமாக இருந்து ஒளியூட்டி வழிகாட்டும் பெருந்தோழர் அய்யா நல்லகண்ணு அவர்கள் பிறந்தநாளில் நேரில் சந்தித்து கழகத்தின் சார்பில் வாழ்த்தி மகிழ்ந்தேன்" என பதிவிட்டுள்ளார்.