தமிழ்நாடு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நல்லகண்ணு நலமாக இருக்கிறார் - முத்தரசன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நல்லகண்ணு நலமாக இருக்கிறார் - முத்தரசன்

JustinDurai

ஆர்.நல்லகண்ணு  காய்ச்சல் காரணமாக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  இரா.முத்தரசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விடுதலைப் போராட்ட வீரர் இரா நல்லகண்ணு நேற்று (20.08.2020) இரவு சளி, காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், அவர் தற்போது நலமுடன் இருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

கட்சியினர் மற்றும் நண்பர்கள், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், நேரில் பார்த்தும் நலம் விசாரிக்க முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.