தமிழ்நாடு

“கணவர் முருகனுக்கும், எனக்கும் தொடர் விடுப்பு கொடுங்கள்”-முதல்வருக்கு நளினி கோரிக்கை

“கணவர் முருகனுக்கும், எனக்கும் தொடர் விடுப்பு கொடுங்கள்”-முதல்வருக்கு நளினி கோரிக்கை

JustinDurai

கணவர் முருகனையும் தன்னையும் தொடர் விடுப்பில் விடுவிக்கக்கோரி "உங்கள் தொகுதியில் முதல்வர்" பிரிவுக்கு நளினி மனு அளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன், பெண்கள் தனிச் சிறையில் உள்ள நளினியை அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுதொடர்பாக நளினியின் தாயார் பத்மா, இந்த வாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நேரில் வலியுறுத்த உள்ளதாக கூறினார்.