தமிழ்நாடு

நளினி உண்ணாவிரதம் வாபஸ்

நளினி உண்ணாவிரதம் வாபஸ்

webteam

வேலூர் மகளிர் தனிச்சிறையிலிருந்து தன்னை புழல் சிறைக்கு மாற்றுமாறு கோரி தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த நளினி தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார். 

கடந்த 12ஆம் தேதி சிறைத்துறையிடம் நளினி அளித்த மனுவில், வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் தன்னை தினந்தோறும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார். அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், 13ஆம் தேதி மாலையிலிருந்து நளினி உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். சிறைத்துறை சார்பில் தொடர்ந்து நளினியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், 5 நாட்கள் கழித்து தனது உண்ணாவிரதத்தை நளினி தற்போது வாபஸ் பெற்றுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26ஆண்டுகளாக நளினி சிறையில் உள்ள குறிப்பிடத்தக்கது.