தமிழ்நாடு

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நளன் குளத்தில் நீராட தடை

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நளன் குளத்தில் நீராட தடை

நிவேதா ஜெகராஜா

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரியில் உள்ள உலகப்புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நளன் குளத்தில் நீராட பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

நாள்தோறும் இக்கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நளன் குளத்தில் நீராடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில் கொரோனா பரவல் அச்சுறுத்தலால் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டதோடு, குளத்திலுள்ள நீரும் வெளியேற்றப்பட்டுள்ளது. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.