காவல்துறையினர் மீது குற்றம்சாட்டி மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் கைதி ஒருவர் உடைகளைக் களைந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை காவல்துறையினர் விசாரணைக்காக தாராபுரம் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். மீண்டும் மதுரை திரும்பியவுடன் காவல்துறையினர் தனக்கு உரிய நேரத்தில் உணவு வாங்கித் தரவில்லை என்று கூறி ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் கைதி தனது உடைகளைக் களைந்து போராட்டம் நடத்தினார். இதனால் காவல்துறையினரும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடைகளை அணியுமாறு கைதியிடம் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனையடுத்து வலுக்கட்டாயமாக கைதிக்கு உடைகளை அணிவித்த காவலர்கள் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.