நயினார் நாகேந்திரன் pt
தமிழ்நாடு

’வருங்கால துணை முதல்வரே..’ கேட்டதும் பதறிய நயினார் நாகேந்திரன்!

அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருங்கால துணை முதல்வர் அவர்களே என்று அழைக்கப்பட்டதை பார்த்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதற்றமடைந்தார்.

PT WEB

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை ஆடி திருவாதிரை ஒட்டி, 23ஆம் தேதி முதல் முப்பெரும் அரசு விழாவானது ராஜேந்திர சோழனால் நிர்மாணிக்கப்பட்ட சோழீஸ்வரர் ஆலய வளாகத்தில் கொண்டாடப்பட உள்ளது.

முப்பெரும் விழாவின் கடைசி நாளான 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவிருக்கிறார்.

நயினார் நாகேந்திரன்

இதற்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாஜக சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வருங்கால துணை முதல்வரே என அழைப்பு..

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை வரவேற்று பேசிய அரியலூர் பாஜக மாவட்ட தலைவர் பரமேஷ்வரி, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களே என கூறியபோது, அப்போது மேடையில் இருந்து வருங்கால துணை முதல்வர் என சொல்லுங்கள் என்று மோடையிலிருந்து குரல் ஒன்று ஒளித்தது.

இதனையடுத்து வருங்கால துணை முதல்வர் நயினார் நாகேந்திரன் அவர்களே! என பாஜ.க மாவட்ட தலைவர் பரமேஸ்வரி அழைக்க, அதற்கு மேடையில் இருந்த நயினார் நாகேந்திரன் பதறிப்போனார். பின்னர் அப்படி எல்லாம் கூறக்கூடாது என்பது போல தெரிவிக்க, அதற்கு பிறகு நமக்கு எதுக்கு வம்பு என்று அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களே என வரவேற்று முடித்தார் மாவட்ட தலைவர் பரமேஷ்வரி.