கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில். ஸ்ரீ நாகராஜாவுக்கு திருக்கோயில் இவ்வூரில் அமைந்துள்ளதால், இவ்வூர் நாகர்கோவில் என அழைக்கப்படுகிறது. இந்நகர் நாஞ்சில் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. நகராட்சியாக இருந்த நாகர்கோவில் பிப்ரவரி 14, 2019 அன்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
மொத்த வாக்காளர்கள்: 2,54,201
ஆண் வாக்காளர்கள் : 1,26,505
பெண் வாக்காளர்கள் : 1,27,696
பிள்ளைமார் – 20%
நாடார் – 17%
கிறித்தவ நாடார் – 14%
மீனவர் (கிறித்தவர்களையும் சேர்த்து) – 13%
ஆதி திராவிடர் – 13%
திருவாங்கூா் மாநிலத்தின் தெற்கு தாலுகாக்களான தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை மெட்ராஸ் மாநிலத்திற்கு மாற்ற 1956ல் உருவாக்கப்பட்ட மாநில சீரமைப்புகக் குழு குழு முடிவு செய்தது.
1956 – நவம்பா் முதல் நாளன்று தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம் மற்றும் விளவங்கோடு ஆகிய நான்கு தாலுகாக்கள் ஒன்றிணைக்கப்பட்டு நாகா்கோவிலை தலைமை இடமாக கொண்டு தமிழ்நாட்டில் கன்னியாகுமரி என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.
சட்டமன்ற தேர்தலில் அதிக முறை வெற்றி பெற்ற கட்சிகள் 1977 முதல் 11 முறை தேர்தல் நடந்திருக்கிறது.
அதிமுக 3 முறை (1977, 1980, 2011)
திமுக 3 முறை (1984, 2006, 2016)
இந்திய தேசிய காங்கிரஸ் 2 முறை (1989, 1991)
தமிழ் மாநில காங்கிரஸ் 1 முறை (1996) எம். மோசஸ் காங் மற்றும் தமாகாவிலிருந்து போட்டியிட்டவர்.
மி வின்செண்ட் அதிமுக – 2 முறை
எம் மோசஸ் காங்கிரஸ் 2 தமாகா 1 = 3
2001க்குப் பிறகு நடந்த தேர்தலில் யாரும் 2ஆவது முறை வெற்றி பெறவில்லை
பாஜக எம் ஆர் காந்தி – 88,804
திமுக சுரேஷ் ராஜன் – 77,135
நாதக விஜயராகவன் – 10,753
மநீம மரிய ஜேக்கப் ஸ்டானி ராஜா – 4037
காங்கிரஸ் விஜய் வசந்த் : 77226
பாஜக பி ராதா கிருஷ்ணன் : 70702
அதிமுக பசிலியன் நசரேத் : 8315
நாம் தமிழர் மரிய ஜெனிஃபர் : 8127