தமிழ்நாடு

மழைநீர் ஒழுகும் காவல் நிலையம்: காவலர்கள் அவதி

மழைநீர் ஒழுகும் காவல் நிலையம்: காவலர்கள் அவதி

webteam

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த பெரம்பூர் காவல் நிலையத்தில் மழைநீர் ஒழுகி வருவதால் காவலர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 

நாகை மாவட்டம் பெரம்பூரில் உள்ள காவல்நிலையத்தில் மேற்கூரையின் காரை சமீபத்தில் பெயர்ந்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், காவல் நிலைய கட்டிடத்தின் மேற்கூரையில் மழைநீர் தேங்கி காவல் நிலையத்திற்குள் ஒழுகி வருகிறது. இதனால் கோப்பு பதிவு அறை, காவலர்கள் ஓய்வு அறை, கைதி அறை ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. காவல்நிலைய மேற்கூரை காரை சமீபத்தில் பெயர்ந்து விழுந்துள்ள நிலையில், அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.