G.Palanivel
G.Palanivel pt desk
தமிழ்நாடு

நாகை: ”உயிரே போனாலும் பரவாயில்லை; ஆளுநர் வந்தால் சந்திப்பேன்” - தியாகி ஜி.பழனிவேல்

webteam

நாகை மாவட்டத்தில் தமிழக ஆளூநர் ஆர்.என்.ரவி நாளை தமிழ் சேவா சங்கம் சார்பில் நாளை நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தர உள்ளார். அதன் ஒருபகுதியாக கடந்த 1968 ஆம் ஆண்டு கீழ்வெண்மணி படுகொலையின் போது குண்டடிபட்டு உயிர் பிழைத்த தியாகி ஜி.பழனிவேலை ஆளுநர் சந்திக்க உள்ளார்.

Governor RN Ravi

இந்த நிலையில் நமது செய்தியாளரிடம் தியாகி ஜி.பழனிவேல் பேசியபோது... "எனக்கு உடல்நிலை சரி இல்லாமல் உள்ளதால் யாரையும் சந்திக்க வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்க சக தோழர்கள் தயாராகி வருகின்றனர். உயிரே போனாலும் பரவாயில்லை ஆளுநர் வந்து சந்தித்த பிறகு என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளேன். மாநில ஆளுநரே என்னை சந்திக்க வரும் போது சந்திக்க வேண்டும். சந்திக்கக் கூடாது என யாரும் எனக்கு கருத்து கூறவில்லை” என ஜி.பழனிவேல் தெரிவித்தார்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான வி.மாரிமுத்து செய்தியாளர்களை சந்தித்த போது...

marimuthu

”நாளைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாகை மாவட்டம் வருகைத்தரும் தமிழக ஆளுநர், கீழ்வெண்மணி கிராமத்தில் தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினரான பழனிவேலை சந்திக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.

இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவாக ஆளுநர் ரவி செயல்படுகிறார். நாகை மாவட்டத்திற்கு வரும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி காட்டுவதுடன் அங்ககுள்ள வீடுகள், பனை மரங்கள், சாலையோரங்களில் கருப்புக் கொடிகளை கட்டி எதிர்ப்பு தெரிவிக்க உள்ளோம்” என அவர் கூறினார்