தமிழ்நாடு

கோடியக்கரையில் மீன்கள் வரத்து அதிகரிப்பு

கோடியக்கரையில் மீன்கள் வரத்து அதிகரிப்பு

webteam

நாகை மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் மீன் வரத்து அதிகரித்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோடியக்கரைப் பகுதியில் இருந்து 150க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் கடலுக்கு சென்ற மீனவர்கள் அதிக அளவில் மீன்களோடு கரை திரும்பினர். மட்லிஸ் மீன்கள், நீலக்கால் நண்டு, புள்ளி நண்டு, ச்சீலா, வாவல் பன்னா, திருக்கை போன்ற மீன்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இதனால் மீன்களை ஏலம் எடுக்கும் விற்பனையாளர்கள் கூட்டம் அலைமோதியது. மீன்களுக்கு போதிய விலை கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.